Neo-Nazi தலைவர் Thomas Sewell 200 மணிநேர சமூக சேவையை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
விக்டோரியா காவல்துறை அதிகாரி மற்றும் அவரது கூட்டாளியை மிரட்டியதாக Neo-Nazi தலைவர் ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது.
அவர் தற்போது வேறு குற்றச்சாட்டுகளுக்காகக் காவலில் உள்ளார். விடுதலையானதும் சமூக சேவை செய்யுமாறு கூறப்பட்டுள்ளார்.
அவர் கடந்த ஆண்டு இரண்டு முறை ஒரு podcast-இல் தோன்றி, காவல்துறை அதிகாரியின் தனிப்பட்ட தகவல்களை வெளியிடுவதாக மிரட்டினார்.
பின்னர் போலீசார் சுவேலின் வீட்டை சோதனை செய்து, காவல்துறை அதிகாரியையும் அவரது கூட்டாளியையும் பாதுகாக்க தனிப்பட்ட பாதுகாப்பு தலையீட்டு உத்தரவுகளை பிறப்பித்தனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த மாஜிஸ்திரேட் Michelle Hodgson, காவல்துறை அதிகாரிகளுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் மற்றும் ஆன்லைன் மிரட்டல்கள் நீதி அமைப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன என்று கூறினார்.