‘திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதா? வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கா உங்கள் ஓட்டு?’ என திருச்சியில் தொண்டர்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் தலைவா் விஜய் கேள்வி எழுப்பினார். பின்னர், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தனது பேச்சை சுருக்கமாக முடித்துக் கொண்டார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது முதல் பிரசாரப் பயணத்தை திருச்சியில் தொடங்கியுள்ளார். நேற்று (13) காலை தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்த அவரை இலட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டு வரவேற்றநிலையில் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விஜய் விமான நிலையத்திலிருந்து வெளியே வருவதற்கே சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல் சென்றுள்ளது.
வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கா உங்கள் ஓட்டு? திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதா? சொன்னீர்களே, செய்தீர்களா?” என்று விஜய் பேசினார்.
பின்னர், உள்ளூர் பிரச்சினைகளை பட்டியலிட்டும், கிட்னி திருட்டு விவகாரம் தொடர்பாகவும் கேள்வி எழுப்பினார்.
விஜய் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே மைக் வேலை செய்யவில்லை. ஸ்பீக்கர்களும் சரியாக வேலை செய்யவில்லை. இதனால் அவர் பேச்சு தொலைக்காட்சி நேரலைகளில் சரிவர கேட்கவில்லை. மேலும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தனது பேச்சை சுருக்கமாக முடித்துக் கொண்டார்.