Newsஇலங்கையில் நாளை முதல் இயங்கும் தாமரைக் கோபுரம்! மக்கள் பார்வையிட சந்தர்ப்பம்

இலங்கையில் நாளை முதல் இயங்கும் தாமரைக் கோபுரம்! மக்கள் பார்வையிட சந்தர்ப்பம்

-

தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டிடமாக நிர்மாணிக்கப்பட்ட தாமரை கோபுரத்தின் செயற்பாடுகளை நாளை முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தாமரை கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் இவ்வருடம் பெப்ரவரி 28 ஆம் திகதி நிறைவடைந்துள்ளதுடன், அதற்காக சீன நிறுவனம் வழங்கிய கடனை செலுத்தும் பணியை 2024 ஆம் ஆண்டு நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

தாமரை கோபுர முதலீட்டில் இதுவரை உள்நாட்டு முதலீட்டாளர்களும் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் இணைந்துள்ளதுடன் 22 முதலீட்டாளர்கள் ஒப்பந்தத்தில் ஈடுபட விருப்பம் தெரிவித்துள்ளதாக தாமரை கோபுர தனியார் நிறுவனத்தின் பிரதம நிர்வாக அதிகாரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் 15 வெவ்வேறு நிகழ்வுகளுக்கான முன்பதிவுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாளை முதல் தாமரை கோபுரம் பொதுமக்களின் பாவனைக்காக திறக்கப்படவுள்ள நிலையில், 500 ரூபா மற்றும் 2000 ரூபா கட்டணத்தில் நுழைவுச்சீட்டுகளை பெற்றுக்கொண்டு உள்ளே செல்ல முடியும்.

வெளிநாட்டவர்களுக்கு டிக்கெட் கட்டணம் 20 அமெரிக்க டொலர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest news

Medicare டிஜிட்டல் சேவைகளை ஒரே இடத்தில் அணுகுவதற்கான புதிய வழி

மில்லியன் கணக்கான ஆஸ்திரேலிய குடிமக்கள் ஒரே ஒரு செயலி மூலம் Medicare digital சேவைகளைப் பயன்படுத்த முடியும். அதன்படி, Express Plus Medicare செயலியைப் பயன்படுத்தாமல் myGov...

ஆஸ்திரேலியாவில் வீட்டிலிருந்து வேலை செய்வதால் காலியாக உள்ள அலுவலக கட்டிடங்கள்

ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களில் அலுவலக காலியிட விகிதங்கள் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக உயர்ந்த அளவை எட்டியுள்ளன. சமீபத்திய தரவுகளின்படி, இந்த ஆண்டின் முதல்...

Asbestos-ஐ தடை செய்வதில் முன்னணியில் உள்ள ஆஸ்திரேலியா

தெற்கு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் Asbestos-ஐ தடை செய்வதில் ஆஸ்திரேலியா முன்னணியில் உள்ளது. உலக சுகாதார நிறுவனம் உட்பட பல அமைப்புகள், வெள்ளை நிற Asbestos...

திவால்நிலைக்கு தள்ளப்பட்ட XL Express நிறுவனம் – 200 பேர் வேலையிழக்கும் நிலை

ஆஸ்திரேலியாவில் 35 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் முன்னணி தேசிய போக்குவரத்து மற்றும் கப்பல் நிறுவனமான XL Express கலைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த நிறுவனம் சுமார் 42 மில்லியன்...