சிட்னியின் தென்மேற்கில் உள்ள ஒரு கார் நிறுத்துமிடத்தில் கார் மோதியதில் ஐந்து மாத பெண் குழந்தை ஒன்று உயிரிழந்ததுடன் ஐந்து வயது குழந்தை ஒன்றும் ஆபத்தான நிலையில் உள்ளது.
மின்டோவின் புரூக்ஃபீல்ட் சாலையில் உள்ள ஒரு பாதசாரி மீது கார் மோதியதாக வந்த தகவலை அடுத்து, பிற்பகல் 3.30 மணியளவில் அவசர சேவைகள் அழைக்கப்பட்டன.
போலீசார் வந்தபோது, இரண்டு குழந்தைகளும் ஒரு SUV வண்டியில் மோதியதில் மிகவும் மோசமான நிலையில் இருப்பதைக் கண்டனர்.
மருத்துவ உதவியாளர்கள் சிகிச்சை அளிப்பதற்கு முன்பு, காவல்துறையினர் குழந்தைக்கு CPR சிகிச்சை அளிக்க முயன்றனர், ஆனால் குறித்த குழந்தை சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டது. ஐந்து வயது குழந்தை வெஸ்ட்மீட்டில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
விபத்து விசாரணை அதிகாரிகள், ஓட்டுநர் தவறுதலாக காரை முன்னோக்கி செலுத்துவதற்கு பதிலாக பின்னோக்கி செலுத்தியிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக கூறியது.