சிட்னி விமான நிலையம் அதன் உள்நாட்டு முனையங்களை விரிவுபடுத்துவதற்கான 20 ஆண்டு திட்டத்தை வெளியிட்டுள்ளது.
2000 ஒலிம்பிக்கிற்குப் பிறகு சிட்னி விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய நவீனமயமாக்கல் திட்டமாக இது கருதப்படுகிறது.
2045 ஆம் ஆண்டுக்குள் ஆண்டுதோறும் 70 மில்லியன் பயணிகளுக்கு சேவை செய்யும் ஒரு mega-hub-ஐ உருவாக்க உள்ளூர் முனையங்களை இணைப்பதே திட்டத்தின் நோக்கம்.
இந்தத் திட்டத்தின் கீழ், தற்போதுள்ள T2 மற்றும் T3 உள்நாட்டு முனையங்களை இணைத்து 12 கூடுதல் வாயில்களை வழங்கும் ஒரு புதிய முனையம் கட்டப்பட உள்ளது.
இந்த திட்டம் 2027 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து 2028 ஆம் ஆண்டின் முற்பகுதிக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், இந்தத் திட்டம் T1 சர்வதேச முனையத்தில் இரண்டு கூடுதல் வாயில்களைச் சேர்க்கத் திட்டமிட்டுள்ளது.