Newsதனி நாடாக அங்கீகரிக்கப்பட்ட பலஸ்தீனம்

தனி நாடாக அங்கீகரிக்கப்பட்ட பலஸ்தீனம்

-

பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா அரசுகள் அறிவித்துள்ளன.

இது குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் செப்டெம்பர் 21 வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஞாயிற்றுக்கிழமை (செப்டெம்பர் 21) முதல் ‘சுதந்திர நாடாக பலஸ்தீனம்’ என்பதை ஆஸ்திரேலியா அங்கீகரிக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதே கருத்தை பிரிட்டன் மற்றும் கனடாவின் பிரதமர்களும் வெளிப்படுத்தி பலஸ்தீன மக்களுக்கான தங்களது ஒருமித்த ஆதரவை மீண்டுமொருமுறை உரைத்துள்ளனர்.

ஜி7 கூட்டமைப்பிலிருந்து முதல் நாடாக, பலஸ்தீனத்தை தனி நாடாக கனடா அங்கீகரித்திருப்பதும் சர்வதேச அரசியலில் உற்றுநோக்கப்படுகிறது.

காஸாவின் மிகப் பெரிய நகரான காஸா சிட்டியில் இஸ்ரேல் இராணுவம் மிகத் தீவிரமாக தாக்குதல் மற்றும் கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. எனவே, அங்கிருந்து மக்கள் அனைவரும் உடனடியாக வெளியேறவேண்டும் என்று இஸ்ரேல் இராணுவம் எச்சரித்துள்ளது.

இந்த நிலையில், காஸாவில் அமைதி நிலைநாட்டப்படுவதை உறுதிசெய்ய முக்கிய நகர்வாக பாலஸ்தீனம் சர்வதேச சமூகத்தால் தனி நாடாக அங்கீகரிக்கப்படுவதன் மூலம் இஸ்ரேலுக்கு நெருக்கடியளித்து காஸா போரில் விரைவில் தீர்வு எட்ட வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest news

குயின்ஸ்லாந்தில் தீப்பிடித்து எரிந்த வீடு – 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

மத்திய குயின்ஸ்லாந்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மூன்று குழந்தைகளும் ஒரு ஆணும் உயிரிழந்துள்ளனர். நேற்று காலை Emerald-இல் உள்ள Opal தெருவில் உள்ள ஒரு duplex-இல்...

Medical இல்லாமல் புதுப்பிக்கப்பட்ட 17,000 டிஜிட்டல் உரிமங்கள்

டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் அமைப்பில் உள்ள ஒரு அடிப்படைக் குறைபாட்டின் காரணமாக, குயின்ஸ்லாந்தில் சுமார் 17,000 ஓட்டுநர்கள் மருத்துவச் சான்றிதழ் இல்லாமலேயே தங்கள் ஓட்டுநர்...

NSW-வில் மூடப்படும் பல சட்டவிரோத புகையிலை கடைகள்

சிட்னியின் St Leonards-இல் சட்டவிரோத புகையிலை பொருட்களை விற்பனை செய்த பல வேப் கடைகளை NSW அரசாங்கம் மூடியுள்ளது. புகையிலை பொருட்கள் தொடர்பான சட்டங்களை மீறி உரிமம்...

வீட்டிலிருந்து வேலை செய்தால் வரிச் சலுகைகள் கிடைக்குமா?

வீட்டிலிருந்து வேலை செய்யும் ஆஸ்திரேலியர்கள் ஆயிரக்கணக்கான டாலர்கள் வரி விலக்குகளைப் பெற தகுதியுடையவர்களாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் ஊரடங்கு காலத்தில் தனது வீட்டில் ஒரு அறையை...