Newsவிசா கட்டணங்களை இரத்து செய்யும் முயற்சியில் பிரித்தானியா

விசா கட்டணங்களை இரத்து செய்யும் முயற்சியில் பிரித்தானியா

-

திறமையானவர்களுக்கான விசா கட்டணங்களை இரத்து செய்வது குறித்து பிரித்தானிய அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா குடியேற்றவிசா குறித்து கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ள நிலையில் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டாமர் இது தொடர்பில் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

பிரித்தானியாவின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் உலகின் சிறந்த விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் மற்றும் டிஜிட்டல் நிபுணர்களை பிரித்தானியாவுக்குள் ஈர்ப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக மேற்படி திட்டத்தை பரிசீலித்து வருவதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கமைய உலகின் முதல் ஐந்து பல்கலைக்கழகங்களில் படித்தவர்கள் அல்லது மதிப்புமிக்க பரிசுகளை வென்றவர்களுக்கான விசா செலவுகளை பூஜ்ஜியமாகக் குறைக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக ட்ரம்ப் நிர்வாகமானது H-1B விசாதாரர்களுக்கான கட்டணத்தை 1 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்த்தியது. இதனால் அங்கு கல்வி கற்று தொழிலை பெறலாம் என எதிர்பார்த்திருந்த வெளிநாட்டு மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர்.

ஆகவே தற்போது பிரித்தானிய முன்னெடுக்கும் இந்த திட்டம் கைகொடுத்தால் அமெரிக்கா செல்ல நினைத்த மாணவர், தொழிலாளர் குழுக்கள் பிரித்தானியாவிற்கு செல்வதற்கு வாய்ப்புள்ளது. இது பிரித்தானியாவின் பொருளாதாரத்தையும் கணிசமாக உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest news

4 பெரியவர்களின் வங்கி விவரங்களைப் பெற்று ஷாப்பிங் செய்த பெண்

முதியோர் பராமரிப்பு மையத்தில் வசிக்கும் நான்கு முதியவர்களிடமிருந்து வங்கித் தகவல்களைப் பெற்றதற்காக ஒரு இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த 23 வயது பெண் Rothwell ஊனமுற்றோர்...

ஆஸ்திரேலியாவில் சமூக வலைத்தளங்களுக்கு புதிய AI தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் Meta

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வயது வந்தோர் கணக்குகளைப் பயன்படுத்துவதையும், இன்ஸ்டாகிராமில் போலி வயதுப் பதிவுகளைப் பயன்படுத்துவதையும் தடுக்க Meta புதிய AI தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது...

பாலியல் குற்றச்சாட்டில் ஜாமீனில் வெளிவந்த நபர் மீண்டும் செய்த பாலியல் பலாத்காரம்

குழந்தை துஷ்பிரயோக குற்றச்சாட்டில் ஜாமீனில் வந்த ஒருவர், தனது காவலில் உள்ள மற்றொரு குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கு ஆஸ்திரேலியாவின் கிம்பர்லியில் வசிக்கும்...

ஆஸ்திரேலியா ஒரு குற்றவியல் மோசடி மையமா? – ஐ.நா. எச்சரிப்பு

தென்கிழக்கு ஆசியாவிலிருந்து பசிபிக் பெருங்கடலில் ஒரு புதிய எல்லைக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற மோசடி மையங்கள் நகர்ந்து வருவதற்கான சான்றுகள் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஆசிய...

ஆஸ்திரேலியா ஒரு குற்றவியல் மோசடி மையமா? – ஐ.நா. எச்சரிப்பு

தென்கிழக்கு ஆசியாவிலிருந்து பசிபிக் பெருங்கடலில் ஒரு புதிய எல்லைக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற மோசடி மையங்கள் நகர்ந்து வருவதற்கான சான்றுகள் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஆசிய...

அமெரிக்காவின் H-1B விசா திட்டத்திற்கான கட்டணத்தில் திருத்தம்

திறமையான விசாக்களுக்கு வருடாந்திர கட்டணம் விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி, H-1B தொழிலாளர் விசாக்களுக்கு நிறுவனங்கள் ஆண்டுக்கு US$100,000 செலுத்த வேண்டும். இந்த...