மெல்பேர்ணில் உள்ள ஒரு chips உற்பத்தி நிறுவனம், மீதமுள்ள சமையல் எண்ணெயைப் பயன்படுத்தி chips packaging உருவாக்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
பிளாஸ்டிக் பயன்பாடு மற்றும் கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
Snackbrands Australia-ஆல் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் கீழ், Thins, CCs மற்றும் Cheezles போன்ற பல பிரபலமான chips பிராண்டுகளுக்கு பேக்கேஜிங் வடிவமைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
அதன் சோதனையின் முதல் கட்டம் இப்போது நிறைவடைந்துள்ளது. மேலும் நிறுவன இயக்குனர் Tracey Seager கூறுகையில், இது கார்பன் வெளியேற்றத்தை 70% குறைக்க முடியும் என்றார்.
மீதமுள்ள எண்ணெய் பொதுவாக கால்நடை தீவனத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் பயோடீசல் தயாரிக்க வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது.
இதற்காக, Snackbrands Australia-இன் சிட்னி தொழிற்சாலை 120 டன் கழிவு எண்ணெயை 100 டன் மென்மையான பிளாஸ்டிக்காக மாற்றி, 15 மில்லியன் பொட்டலங்களை உற்பத்தி செய்துள்ளது.
நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மேலாளர் James Harrington, புதிய பேக்கேஜிங்கின் தரம் சோதிக்கப்பட்டு வருவதாகவும், இதுவரை சுற்றுச்சூழலில் எந்தவிதமான பாதகமான விளைவுகளும் ஏற்பட்டதாக எந்த அறிக்கையும் இல்லை என்றும் கூறுகிறார்.
இருப்பினும், இந்தத் திட்டம் முக்கியமானதாக இருந்தாலும், பேக்கேஜிங்கை எவ்வாறு முறையாக அப்புறப்படுத்துவது என்பது குறித்து நுகர்வோருக்குக் கல்வி கற்பிப்பதும் அவசியம் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.