வரும் வாரங்களில் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் பொது விடுமுறையை அனுபவிக்க முடியும்.
ஒக்டோபர் நீண்ட வார இறுதியில் பல மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களுக்கு பொது விடுமுறை இருக்கும், சில மாநிலங்களுக்கு விடுமுறை இருக்காது.
ஒக்டோபர் நீண்ட வார இறுதி வெள்ளிக்கிழமை, ஒக்டோபர் 3 முதல் திங்கள், ஒக்டோபர் 6 வரை நீடிக்கும்.
அதன்படி, தெற்கு ஆஸ்திரேலியா, NSW மற்றும் ACT ஆகிய மாநிலங்களுக்கு தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஒக்டோபர் 6 ஆம் திகதி திங்கட்கிழமை பொது விடுமுறை அளிக்கப்படும்.
குயின்ஸ்லாந்து குடியிருப்பாளர்கள் மன்னரின் பிறந்தநாளுக்கு அதே நாளில் பொது விடுமுறையைப் பெறுவார்கள்.
வடக்குப் பிரதேசம், டாஸ்மேனியா, விக்டோரியா மற்றும் மேற்கு ஆஸ்திரேலியாவில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு அக்டோபரில் பொது விடுமுறை இருக்காது என்று கூறப்படுகிறது.
இருப்பினும், AFL Grand Final நடைபெறுவதால், செப்டம்பர் 26 வெள்ளிக்கிழமை விக்டோரியர்கள் பொது விடுமுறையை அனுபவிக்க முடியும்.
AFL Grand Final செப்டம்பர் 27 சனிக்கிழமை மெல்பேர்ண் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.