மெல்பேர்ண் நகர மையத்தில் புதிய CBD bypass-ஆக Wurundjeri சாலை போக்குவரத்துக்கு திறக்கப்படும் என்று விக்டோரியன் அரசாங்கம் அறிவித்துள்ளது.
புதிய சாலை ஒக்டோபர் 27 ஆம் திகதி திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தச் சாலை மேற்கு மெல்பேர்ணில் உள்ள Dynon சாலையையும் Docklands-இல் உள்ள Wurundjeri-ஐயும் இணைக்கிறது.
Dudley தெருவில் ஒரு புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. மேலும் Wurundjeri சாலை ஆறு வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட்டுள்ளது.
திறக்கப்பட்ட முதல் நாளில் 10,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்தச் சாலையைப் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் West Gate சுரங்கப்பாதை மற்றும் Footscray சாலை திறக்கப்படுவதால் இது மேலும் அதிகரிக்கும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
இந்தப் புதிய சாலை திறக்கப்படுவதால், Docklands பகுதிக்கு மேம்பட்ட அணுகல் கிடைக்கும், நெரிசல் குறையும், 73,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் 17,500க்கும் மேற்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு மேம்பட்ட அணுகல் கிடைக்கும்.