அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வேண்டுமென்றால், காஸா போரை நிறுத்த வேண்டும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மெக்ரோன் கூறுகையில், “ஐ.நா. சபை பொதுக்கூட்டத்தில் காஸாவில் அமைதி திரும்ப வேண்டுமென ட்ரம்ப் வலியுறுத்தினார்.
காஸா மீதான போரை முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேலுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பால் அழுத்தம் தர முடியும்.
காஸா மீது போரை நடத்துவதற்கு அமெரிக்கா ஆயுதங்களையும், உபகரணங்களையும் வழங்குகிறது. அமெரிக்காவுக்கு மட்டுமே காஸா போரை முடிவுக்கு கொண்டு வரும் ஆற்றல் உள்ளது.
ஏற்கனவே ஏழு போர்களை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக பெருமிதம் தெரிவிக்கும் ட்ரம்ப், காஸா போரை நிறுத்த வேண்டும். காஸா போரை நிறுத்தினால் மட்டுமே அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கும்.” என மேலும் தெரிவித்தார்.