Melbourneமெல்பேர்ணில் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் ஆறு நூல்கள் வெளியீட்டு விழா

மெல்பேர்ணில் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் ஆறு நூல்கள் வெளியீட்டு விழா

-

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆஸ்திரேலியா, மெல்பேர்ண் மாநகரில் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் ஆறு நூல்கள் வெளியிடப்பட உள்ளது.

“தேசிய சுய நிர்ணயமும் ஐரோப்பிய சிறுபான்மை இனங்களும்”, “இலத்தீன் அமெரிக்காவில் தேசிய இன முரண்பாடுகள்”, “ஆபிரிக்க தேசிய இனங்களும் சுயநிர்ணய விடுதலையும்”, “முரண்பாடுகள் முற்றிய அரபுலகின் தேசிய இனங்கள்”“தென்கிழக்காசிய விடுதலைப் போராட்டங்கள்”, “இந்தியாவில் தேசிய இன எழுச்சியும் வீழ்ச்சியும்” ஆகிய
ஐங்கரன் விக்கினேஸ்வராவின் ஆறு நூல்கள் வெளியீடு எதிர்வரும் ஒக்டோபர் 25ம் திகதி சனிக்கிழமை நடைபெற உள்ளது.

வலென் மத்திய கலை மண்டபம், வெர்மான்ட் மேல்நிலைக் கல்லூரி, 27-63 மொராக் சாலை, வெர்மான்ட், விக்டோரியா 3133. (Fallon Centre Auditorium,Vermont Secondary College, 27-63 Morack Road, Vermont VIC 3133) எனும் முகவரியில் உள்ள மண்டபத்தில் மாலை 1600 முதல் 1900 மணி வரை இவ் வெளியீட்டு நிகழ்வு நடைபெற உள்ளது.

இந்நிகழ்வு திரு. திரு. பாடும்மீன் சு. ஸ்ரீகந்தராசா அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது. இந்நூல் வெளியீட்டு விழாவில் நூலாசிரியர் அறிமுக உரையை திரு. ரமேஷ் பாலா அவர்கள் உரையாற்றுவார். அத்துடன் நூல்களின் ஆய்வுரைகளை மெல்பேர்ண் இலக்கிய ஆர்வலர்கள் வழங்குவார்கள். தென்கிழக்காசிய விடுதலைப் போராட்டங்கள் எனும் நூலுக்கு திரு. ராஜா கருப்பையா அவர்கள் நூலாய்வுரை நிகழ்த்துவார்.

ஆபிரிக்க தேசிய இனங்களும் சுயநிர்ணய விடுதலையும் என்ற நூலை திருமதி. நித்யா தர்மசீலன் அவர்கள் நூலாய்வுரை நிகழ்த்துவார். முரண்பாடுகள் முற்றிய அரபுலகின் தேசிய இனங்கள் குறித்த நூல் ஆய்வை திரு. ஜூட் பிரகாஷ் அவர்கள் நூலாய்வுரை நிகழ்த்துவார்.

இந்தியாவில் தேசிய இன எழுச்சியும் வீழ்ச்சியும் என்ற நூல் குறித்த ஆய்வை திரு. ருத்ராபதி அவர்கள் நூலாய்வுரை நிகழ்த்துவார். அத்துடன் இலத்தீன் அமெரிக்காவில் தேசிய இன முரண்பாடுகள் பற்றிய நூலாய்வை திரு. ஆவூரான் சந்திரன் அவர்கள் நிகழ்த்துவார்.

மேலும் தேசிய சுய நிர்ணயமும் ஐரோப்பிய சிறுபான்மை இனங்களும் என்ற நூலை திரு. கிறிஷ்டி நல்லரட்ணம் அவர்கள் நூலாய்வுரை நிகழ்த்துவார்.

அத்துடன் இந்நிகழ்வில் சிறப்புரையை மெல்பேர்ண் புகழ் சட்டத்தரணி திரு. ரவிந்திரன் அவர்களும் உரையாற்றுவார். மெல்பேர்ண் மாநகரில் நிகழும் இந்நூல் வெளியீட்டின் ஏற்புரையை நூலாசிரியர் திரு. ஐங்கரன் விக்கினேஸ்வரா அவர்கள் நிகழ்த்துவார்.

Latest news

புகைபிடிக்காத குழந்தைகளை வளர்ப்பதற்கான ஒரு புதிய திட்டம்

ஆஸ்திரேலிய அரசாங்கம், இளம் குழந்தைகளுக்கு நிக்கோடின் மற்றும் புகையிலை பொருட்கள் பற்றிய துல்லியமான அறிவை வழங்குவதற்கும், சகாக்கள் மற்றும் வணிக அழுத்தத்தை சமாளிக்கும் திறன்களைப் பயிற்றுவிப்பதற்கும்...

ஐ.நா.வில் அல்பானீஸ் கூறிய முக்கியமான செய்தி

செப்டம்பர் 21, 2025 முதல் ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக ஆஸ்திரேலியா அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளதாக அரசாங்கம் கூறுகிறது. ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையை...

மறைந்துள்ள பாலியல் வன்கொடுமை செய்பவரின் அடையாளத்தை வெளிப்படுத்தும் நவீன DNA தொழில்நுட்பம்

"Night Stalker" என்று அழைக்கப்படும் ஒரு பாலியல் வன்கொடுமை குற்றவாளி, பல தசாப்தங்களாக 18 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். 1991 மற்றும் 1993 க்கு...

நோபல் பரிசு வேண்டுமெனில் காஸா போரை ட்ரம்ப் நிறுத்த வேண்டும் – பிரான்ஸ் ஜனாதிபதி

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வேண்டுமென்றால், காஸா போரை நிறுத்த வேண்டும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மெக்ரோன்...

பிரதமர் அல்பானீஸின் கனவு விரைவில் நனவாகும் என்பதற்கான அறிகுறிகள்

பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையேயான சந்திப்பு அடுத்த மாதம் வெள்ளை மாளிகையில் நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இரு தலைவர்களும்...

விரைவில் தண்ணீர் தீர்ந்து போகும் ஆஸ்திரேலிய மாநிலம்

வரும் ஆண்டுகளில் கடுமையான வறட்சி மற்றும் நீர் பற்றாக்குறையை சந்திக்கும் என்று கணிக்கப்பட்ட உலகளாவிய பகுதிகளில் தெற்கு ஆஸ்திரேலியாவும் ஒன்று என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. இந்த...