NewsPUBG-யால் விபரீதம் - தாய், சகோதரர்களை சுட்டுக்கொன்ற சிறுவன்

PUBG-யால் விபரீதம் – தாய், சகோதரர்களை சுட்டுக்கொன்ற சிறுவன்

-

பாகிஸ்தானின் லாகூரின் கஹ்னா பகுதியைச் சேர்ந்த ஜைன் அலி எனும் 17 வயது சிறுவனுக்கு 100 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Online PUBG விளையாட்டில் ஏற்பட்ட தாக்கத்தின் உச்சத்தில் தாயார் மற்றும் மூன்று சகோதரர்களை சுட்டுக்கொன்ற வழக்கிலேயே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு இச்சம்பவம் நடந்துள்ளது. அப்போது சிறுவனுக்கு 14 வயது ஆகும்.

குறித்த சிறுவன் PUBG விளையாட்டில் அடிமையாகயிருந்ததாகவும், இதனை தாய் கண்டித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் PUBG-இல் தனக்கான இலக்குகளை அடையமுடியாத சந்தர்ப்பங்களில் சிறுவன் ஆக்ரோஷமடைவதை வழக்கமாகவும் கொண்டுள்ளார்.

கொலை நடந்த அன்று, பல மணித்தியாலங்களாக PUBG விளையாடிய சிறுவன், ஒரு இலக்கை தவறவிட்டதால் ஆத்திரமடைந்துள்ளார்.

அதேநேரம் சிறுவன் அதிக நேரம் விளையாட்டில் மூழ்கியிருப்பதாக அவனது தாய் கண்டிக்கவே சிறுவனுக்கு மேலும் எரிச்சல் அதிகரித்தது.

இதனால் சிறுவனின் தாயார் நாகித் முபாரக், அண்ணன் தைமூர், இரண்டு சகோதரிகள், மஹ்னூர் மற்றும் ஜன்னத் ஆகியோர் உறங்கிக்கொண்டிருந்த சமயத்தில் வீட்டிலிருந்த கைத் துப்பாக்கியை எடுத்து சிறுவன் ஜைன் அலி அவர்களை சுட்டுக் கொன்றுள்ளான்.

விளையாட்டின் தீவிர தாக்கத்தால் இக்கொலை இடம்பெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது. இவ்வழக்கை விசாரித்த லாகூர் நீதிமன்றம் நேற்று இத் தீர்ப்பை வழங்கியது.

குறித்த சிறுவனின் வயதை அடிப்படையாகக் கொண்டு, மரண தண்டனைக்குப் பதிலாக நான்கு வருடங்கள் ஆயுள் தண்டனை அதாவது, ஒரு கொலைக்கு 25 வருடங்கள் என மொத்தம் 100 வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதோடு, 4 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Latest news

இந்த வாரம் விக்டோரியாவில் அதிகரிக்கப்பட உள்ள போக்குவரத்துச் சட்டங்கள்

AFL Grand Final நடைபெறும் நாளில் விக்டோரியாவில் பாதுகாப்பை பலப்படுத்த போலீசார் ஒரு புதிய நடவடிக்கையை மேற்கொள்ள தயாராகி வருகின்றனர். "Operation Scoreboard" என்று அழைக்கப்படும் இந்த...

கட்டுமானத் துறையில் பெண்களுக்கு அதிக சம்பளம்

ஆஸ்திரேலியாவின் வீட்டுவசதி பற்றாக்குறைக்கு ஒரு தீர்வாக கட்டிடம் மற்றும் கட்டுமானத் துறையில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க அரசாங்கம் நம்புகிறது. கட்டிடக் கட்டுமானத் துறையில் பெண்கள் 13% மட்டுமே...

டெஸ்லா “Self-Driving” update தொடர்பான விக்டோரியன் சட்டம்

Tesla கார்களுக்கான புதுப்பிக்கப்பட்ட Full Self-Driving (Supervised) மென்பொருளைப் பயன்படுத்துவது தொடர்பாக ஆஸ்திரேலியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறு சட்டங்களைக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் புதிய Tesla...

“உலக சர்வாதிகாரிகள் போர் என்ற போர்வையில் நாடுகளைக் கட்டுப்படுத்துகிறார்கள்” – பிரதமர் அல்பானீஸ்

நேற்று முன்தினம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் உரையாற்றிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், உலகின் நடுத்தர சக்திகளும் சிறிய நாடுகளும் வல்லரசுகளுடன் நிற்க வேண்டும்...

“உலக சர்வாதிகாரிகள் போர் என்ற போர்வையில் நாடுகளைக் கட்டுப்படுத்துகிறார்கள்” – பிரதமர் அல்பானீஸ்

நேற்று முன்தினம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் உரையாற்றிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், உலகின் நடுத்தர சக்திகளும் சிறிய நாடுகளும் வல்லரசுகளுடன் நிற்க வேண்டும்...

அவசரநிலையைச் சமாளிக்க ஆஸ்திரேலியர்களிடம் பணம் இல்லை என கூறும் கணக்கெடுப்பு 

நிதி அவசரநிலையைச் சமாளிக்க மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் பணம் இல்லாமல் தவிப்பது தெரியவந்துள்ளது. வேலை இழப்பு அல்லது நோய் காரணமாக அவர்கள் உடனடி பொருளாதார நெருக்கடியில் விழும்...