கடந்த ஜூன் மாதம் ஆஸ்திரேலிய தமிழர்கள் அமைப்பு நடத்திய “மொய் விருந்து” நிகழ்வில் கலந்துகொண்டு ஆதரவளித்து, நங்கொடையும் அளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
நிகழ்வின் மூலம் பெற்ற நன்கொடையின் பலனாக தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா அதம்பை குளம் தூர் வாரும் பணியை ஆஸ்திரேலிய தமிழர்கள் முன்னெடுத்து மெகா பவுன்டேசனுடன் கைகோர்த்து கிட்ட தட்ட 4 ஹெக்டர் நிலப்பரப்பு கொண்ட குளத்தை வெற்றிகரமாக சீரமைத்து முடித்துள்ளனர்.
இந்த செயலை பாராட்டும் விதமாக அவ்வூர் மக்கள் ஆஸ்திரேலிய தமிழர்கள் பொதுநல அமைப்பிற்கும் ஆஸ்திரேலிய வாழ் தமிழர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.