Newsஆஸ்திரேலியாவில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி! கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற இசைஞானி

ஆஸ்திரேலியாவில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி! கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற இசைஞானி

-

இசைஞானி இளையராஜா உட்பட அவரது இசைக்குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

சென்னையில் இருந்து கொழும்பு வழியாக ஆஸ்திரேலியா புறப்பட்டு வருவதற்காக அவர்கள் அங்கு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய இசைஞானி இளையராஜா உட்பட இசைக்குழுவினருக்கு ஸ்ரீலங்கன் விமான சேவையின் ஊழியர்கள் சிறப்பான வரவேற்பை வழங்கியதாக விமான சேவை நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா சிட்னி மற்றும் மெல்பேர்ன் நகரில் நாளையும், நாளை மறுதினமும் நடைபெறும் இசை நிகழ்ச்சியில் பிரபல திரைப்பட பின்னணி பாடகர் மனோ, பாடகர் எஸ்.பி.பி.சரண், பாடகி சுவேதா மோகன், பாடகர் மது பாலகிருஷ்ணன் உட்பட பல இசை கலைஞர்கள் கலந்துக்கொள்ள உள்ளனர்.

இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

Latest news

தவறான தீர்ப்பால் 20 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த ஆஸ்திரேலிய பெண்

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணம், சொந்த குழந்தைகளின் மரணத்திற்காக இரண்டு தசாப்தங்களாக தவறாக சிறையில் அடைக்கப்பட்ட பெண் ஒருவருக்கு 1.31 மில்லியன் டொலர் இழப்பீடு...

நிலவை முதல் முறை சுற்றி வந்த விண்வெளி வீரர் காலமானார்

நிலவை முதன்முதலில் சுற்றி வந்த விண்வெளி வீரர் Jim Lovell அவரது 97 ஆவது வயதில் காலமாகியுள்ளார். அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் லேக் பாரஸ்ட் பகுதியிலுள்ள அவரது...

ஆஸ்திரேலியா அணுசக்தியை நிராகரித்தால் எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடும்!

அணுசக்தியை நிராகரித்தால் ஆஸ்திரேலியா எதிர்காலத்தில் எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இங்கிலாந்து தலைமை அறிவியல் ஆலோசகர் ராபின் கிரிம்ஸ் எச்சரித்துள்ளார். சிட்னியில் அணுசக்தி தொடர்பான ஒரு...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் லித்தியம் அயன் பேட்டரி தீ விபத்துக்கள்

ஆஸ்திரேலியாவில் லித்தியம்-அயன் பேட்டரிகளால் ஏற்படும் தீ விபத்துகள் அதிகரித்துள்ளன. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை மேற்கு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட தீ விபத்துகளின் எண்ணிக்கை, 2020 ஆம்...

குயின்ஸ்லாந்தில் அதிகரித்துவரும் காய்ச்சல் – தடுப்பூசி போடுமாறு அறிவுறுத்தல்

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் காய்ச்சல் பாதிப்புகள் 20% அதிகரித்துள்ளது. பதிவான காய்ச்சல் பாதிப்புகளில் 89% தடுப்பூசி போடப்படாதவை என்று சுகாதாரத் துறை வெளிப்படுத்தியுள்ளது. அதன்படி, இந்த ஆண்டு காய்ச்சல்...

GPT-5 ஐ வெளியிட்டுள்ளது Open AI

நவம்பர் 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்ட GPT, இப்போது உலகில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ChatGPT இன் புதிய பதிப்பான GPT – 5, புதிதாக வெளியிடப்பட்ட...