விக்டோரியாவில் உள்ள Mount Buffalo தேசிய பூங்கா தற்காலிகமாக மூடப்படும் என்று பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 26 அன்று Porepunkah-இல் இரண்டு போலீஸ் அதிகாரிகளை சுட்டுக் கொன்று மற்றொருவரை காயப்படுத்திய Desi Freeman-ஐ கண்டுபிடிக்க போலீஸ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இன்று தொடங்கும் நீண்ட வார இறுதி விடுமுறை காரணமாக, பூங்காவிற்கு வருகை தர திட்டமிட்டுள்ள அனைத்து சுற்றுலாப் பயணிகளும் வருகை தர வேண்டாம் என்று விக்டோரியா காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
மெல்பேர்ணில் இருந்து 350 கி.மீ தொலைவில் அமைந்துள்ள Mount Buffalo தேசிய பூங்கா, 31,000 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இது காவல்துறை அதிகாரிகளின் தொடர்ச்சியான கண்காணிப்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்ட Desi Freeman-ஐ தேடுவதற்காக ஆஸ்திரேலியாவில் ஒரு பெரிய போலீஸ் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு மில்லியன் டாலர்கள் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.