நியூசிலாந்தின் ஆக்லாந்தில் தனது இரண்டு குழந்தைகளைக் கொலை செய்து, பின்னர் அவர்களை ஒரு சேமிப்பு அறையில் விட்டுவிட்டு வெளிநாடு சென்ற தாய் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஜூன் 2018 இல், சம்பந்தப்பட்ட பெண் தனது 8 வயது மகள் மற்றும் 6 வயது மகனை உணவில் விஷம் கலந்து கொன்றார்.
பின்னர் குழந்தைகளின் உடல்கள் மூன்று மெல்லிய பிளாஸ்டிக் பைகளில் கட்டப்பட்டு, ஒரு சூட்கேஸில் வைக்கப்பட்டு, Papatoetoe Safe Store-இற்கு கொண்டு செல்லப்பட்டன.
பின்னர் அந்தப் பெண் வேறு பெயரில் தென் கொரியாவுக்குத் தப்பிச் சென்று நான்கு ஆண்டுகளாகக் கடைக்குக் கட்டணம் செலுத்தி வந்ததை நியூசிலாந்து போலீசார் கண்டுபிடித்தனர்.
பின்னர் தென் கொரியாவில் கைது செய்யப்பட்ட தாய், நியூசிலாந்திற்கு அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
ஆரம்ப விசாரணையில், கணவர் இறந்த பிறகு, அந்தப் பெண் மனநலக் கோளாறால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
14 நாள் விசாரணைக்குப் பிறகு அந்தத் தாய் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, இன்னும் தண்டனை வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.