ஜெர்மனியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் முன்னணி வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனமான Bosch அதன் கிளையிலிருந்து சுமார் 13,000 பேரை பணிநீக்கம் செய்ய தீர்மானித்துள்ளது.
உலகம் முழுவதும் நான்கு இலட்சத்துக்கும் அதிகமானோர் இந்நிறுவனத்தில் பணிபுரிகின்றனர்.
உலகளாவிய வாகன சந்தையில் ஏற்பட்ட மந்தமான சூழலால் வாகன உற்பத்தி வெகுவாக சரிந்துள்ளது. இதனை முன்னிட்டு Bosch நிறுவனமும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விதித்துள்ள கட்டணங்களால் ஏற்பட்ட செலவு அதிகரிப்பும் இதற்கு ஒரு காரணம் என நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.