தெற்கு ஆஸ்திரேலியாவில் வேகமாக வாகனம் ஓட்டியதற்காக ஒருவருக்கு போலீசார் மிகப்பெரிய அபராதம் விதித்துள்ளனர்.
Lincoln நெடுஞ்சாலையில் மணிக்கு 179 கிமீ வேகத்தில் சென்ற காரை போலீசார் பிடித்தனர்.
அந்த சாலையில் வேக வரம்பு மணிக்கு 100 கி.மீ ஆகும்.
குறித்த வாகனத்தை ஓட்டிய 21 வயது ஓட்டுநருக்கு மிகப்பெரிய $2,059 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அவரது ஓட்டுநர் உரிமத்தை ஆறு மாதங்களுக்கு ரத்து செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.