நியூ சவுத் வேல்ஸைச் சேர்ந்த எட்டு Skydivers ஒரு அபாயகரமான விமான விபத்தில் இருந்து தப்பித்துள்ளனர்.
அவர்கள் பயணித்த விமானம், Skydiving பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பும் போது சிட்னியின் Moruya விமான நிலையத்திற்கு அருகே விபத்துக்குள்ளானது.
விமானத்தின் விமானி இறந்துவிட்டதாக ஆஸ்திரேலிய பாராசூட் கூட்டமைப்பு (APF) உறுதிப்படுத்தியுள்ளது.
விபத்துக்கு முன்னர் Skydivers விமானத்திலிருந்து வெற்றிகரமாக வெளியேறினர்.
இதற்கிடையில், ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு பணியகம் (ATSB) ஏற்கனவே விபத்து குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
விமானத்தின் பராமரிப்பு விவரங்கள், வானிலை நிலைமைகள் மற்றும் விமானப் பாதை தரவுகள் ஆராயப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.