இந்தோனேசிய உறைவிடப் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து காணாமல் போன மாணவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கிழக்கு ஜாவாவில் உள்ள ஒரு இஸ்லாமிய உறைவிடப் பள்ளியில் மாணவர்கள் நேற்று பிரார்த்தனை செய்து கொண்டிருந்தபோது ஒரு கட்டிடம் இடிந்து விழுந்தது.
ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 38 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இடிபாடுகளை அகற்றும் போது காயமடைந்த கிட்டத்தட்ட 80 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தோனேசிய பேரிடர் தணிப்பு நிறுவனம் ஒரு அறிக்கையில், சம்பவ இடத்திலிருந்து 102 பேர் வெளியேற்றப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
கட்டுமானப் பணியின் போது கட்டிடத்தின் நான்காவது தளம் இடிந்து விழுந்தது.
நான்காவது மாடியின் கட்டுமானம் எடையைத் தாங்கத் தவறியதால் கட்டிடத்தின் அடித்தளம் இடிந்து விழுந்தது என்பது இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.