Newsலண்டனிலுள்ள மகாத்மா காந்தி சிலை சேதம்

லண்டனிலுள்ள மகாத்மா காந்தி சிலை சேதம்

-

ஒக்டோபர் 2 ஆம் திகதி ஆண்டுதோறும் நடைபெறும் காந்தி ஜெயந்தி கொண்டாட்டங்களுக்கு சில நாட்களுக்கு முன்பு, லண்டன் டேவிஸ்டாக் சதுக்கத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துக்கு இங்கிலாந்தில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடரபில் இந்திய உயர் ஸ்தானிகராலயம் சமூக ஊடகங்களில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, லண்டனில் உள்ள டேவிஸ்டாக் சதுக்கத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலையை சேதப்படுத்திய வெட்கக்கேடான செயலுக்கு வருத்தத்தையும், கடுமையான கண்டனத்தையும் தெரிவிக்கின்றோம்.

இது வெறும் நாசவேலை மட்டுமல்ல, சர்வதேச அகிம்சை தினத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, அகிம்சை என்ற கருத்து மற்றும் மகாத்மாவின் மரபு மீதான வன்முறைத் தாக்குதலாகும்.

இதற்கான உடனடி நடவடிக்கையை நாங்கள் உள்ளூர் அதிகாரிகளிடமிருந்து எதிர்பார்க்கின்றோம். மேலும் எங்கள் குழு ஏற்கனவே சம்பவ இடத்தில் உள்ளது. சிலையை அதன் அசல் வடிவமைப்புடன் மீட்டெடுக்க அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறோம் – என்று அது கூறியது.

ஐக்கிய நாடுகள் சபையால் சர்வதேச அகிம்சை தினமாக நியமிக்கப்பட்ட காந்தி ஜெயந்தி, ஆண்டுதோறும் ஒக்டோபர் 2 ஆம் திகதியன்று லண்டனில் உள்ள நினைவுச்சின்னத்தில் மலர் அஞ்சலி மற்றும் காந்திஜியின் விருப்பமான பாடல்களுடன் நினைவுகூரப்படுகிறது.

இந்தியா லீக்கின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட வெண்கலச் சிலை, அருகிலுள்ள லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் மகாத்மா காந்தி சட்ட மாணவராக இருந்த நாட்களைக் குறிக்கும் வகையில் 1968 ஆம் ஆண்டு சதுக்கத்தில் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் லண்டன் பெருநகர காவல்துறை மற்றும் உள்ளூர் அதிகாரிகள் நாசவேலை குறித்த விசாரணை மேற்கொண்டு வருகின்றது.

Latest news

10 நாடுகளுக்கு விரிவடைந்து, விசா தேவைகளை எளிதாக்கும் Australian Immi App

ஆஸ்திரேலிய Immi App மேலும் 10 நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இது ஆயிரக்கணக்கான மக்களின் விசா தேவைகளை எளிதாக்குகிறது. அதன்படி, செப்டம்பர் 30, 2025 முதல், முன்னர் கைரேகைகளை...

ஆஸ்திரேலியா சீனாவிற்கு ஏற்றுமதி செய்வது குறித்து அல்பானீஸ் கவலை

ஆஸ்திரேலிய பொருளாதாரத்திற்கு அதிக வருமானத்தை அளிக்கும் சீனாவிற்கு இரும்புத் தாது ஏற்றுமதியை அவசரமாக மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறுகிறார். ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மற்றும்...

போலி நாணயத்தாள்கள் பற்றி கவனமாக இருங்கள் – காவல்துறை எச்சரிக்கை

போலி நாணயத்தாள்களின் அதிகரிப்பு குறித்து ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தெற்கு ஆஸ்திரேலிய காவல்துறையினர், அடிலெய்டில் உள்ள வணிக நிறுவனங்களில் கள்ளநோட்டு கவுண்டர்களிடம் ஒப்படைக்கப்படுவது அதிகரித்து வருவதாகக் கூறுகின்றனர். கடந்த...

ஆஸ்திரேலியாவில் குறைந்துள்ள வரி செலுத்தாத பெரிய நிறுவனங்களின் எண்ணிக்கை

ஆஸ்திரேலியாவில் வரி செலுத்தாத பெரிய நிறுவனங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ஆஸ்திரேலிய வரிவிதிப்பு அலுவலகம் (ATO) தெரிவித்துள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கை...

எலோன் மஸ்க் தொடர்பில் வெளியான சமீபத்திய அறிக்கை

உலகில் 500 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்களை வைத்திருக்கும் முதல் நபராக எலான் மஸ்க் உருவெடுத்துள்ளார். அமெரிக்க பங்குச் சந்தையில் டெஸ்லா பங்குகள் கிட்டத்தட்ட 4% உயர்ந்ததால்...

இன்று தொடங்கும் விக்டோரியாவின் 2025–26 திறன் இடம்பெயர்வு திட்டம்

விக்டோரியாவின் 2025–26 திறன் இடம்பெயர்வு திட்டம் இப்போது திறக்கப்பட்டுள்ளது. விக்டோரியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் உள்துறைத் துறை, 2025–2026 திட்ட ஆண்டிற்காக விக்டோரியாவிற்கு...