அமெரிக்காவின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான கலிபோர்னியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள செவ்ரான் எல் செகுண்டோ சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கலிபோர்னியா ஆளுநரின் கூற்றுப்படி, தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. தீ பாரியதாக இருந்தாலும், அது ஒரு பகுதிக்கு மட்டுமே பரவியுள்ளது என்று கூறியுள்ளார்.
தீயணைப்பு வீரர்கள் மற்றும் அவசரகால குழுக்கள் தீயைக் கட்டுப்படுத்த கடுமையாக உழைத்து வருகின்றனர், மேலும் உயிரிழப்புகள் குறித்து உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
இந்த சுத்திகரிப்பு நிலையம் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 300,000 பீப்பாய்கள் மசகு எண்ணெய்யை பதப்படுத்துகிறது. பெற்றோல், ஜெட் எரிபொருள் மற்றும் டீசல் ஆகியவை இங்கு சுத்திகரிக்கபடுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த சுத்திகரிப்பு நிலையம் 150 தொட்டிகளில் 12.5 மில்லியன் பீப்பாய்களை சேமித்து வைக்கிறது.