பராகுவே தலைநகர் அசுன்சியனில் ஒரே நேரத்தில் 600க்கும் மேற்பட்ட ஜோடிகள் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
நாடு முழுவதும் திருமணங்களை எளிதாக்குவதற்கான அரசாங்க முயற்சியின் ஒரு பகுதியாக இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொருளாதார அல்லது பல்வேறு சமூகத் தடைகள் காரணமாக திருமணம் செய்து கொள்ள முடியாத தம்பதிகளுக்கு சட்டப் பாதுகாப்பை வழங்குவதே இதன் நோக்கமாகும்.
கத்தோலிக்க மற்றும் புராட்டஸ்டன்ட் மதத் தலைவர்களும் இந்த ஜோடியை ஆசீர்வதித்தனர்.
மேலும், கடந்த வாரம் பராகுவேயின் இரண்டாவது பெரிய நகரமான சியுடாட் டெல் எஸ்டேயில் நடைபெற்ற திருமண விழாவில் 120 ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர்.
பராகுவே நாட்டின் சிவில் ஆவணக் காப்பகத்தின் விளம்பர இயக்குநர் ரோக் ஸ்டூபி, திருமணத்தில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை, காதல், குடும்பம் மற்றும் திருமணம் ஆகியவற்றில் பராகுவே அரசின் வலுவான நம்பிக்கையை உலகிற்குக் காட்டியது என்றார்.