இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள சிடோர்ஜோ நகரிலுள்ள பாடசாலை கட்டடத்தின் ஒரு பகுதி கடந்த 29ஆம் திகதி இடிந்து விழுந்ததில் ஏராளமான மாணவர்கள் சிக்கிக் கொண்டனர்.
குறித்த விபத்தையடுத்து மீட்புக்குழுவினர் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
கடந்த 5 நாட்களாக மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், விபத்தில் சிக்கி உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை தற்போது 37 ஆக அதிகரித்துள்ளது.
அதே சமயம் இடிபாடுகளில் சிக்கிய 104 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.