Newsசிறைக்கு செல்லும்போது கொல்லப்படுவார்கள்! - காதலி பயங்கர எச்சரிக்கை

சிறைக்கு செல்லும்போது கொல்லப்படுவார்கள்! – காதலி பயங்கர எச்சரிக்கை

-

ஆஸ்திரேலியாவில் தனது காதலன் கொல்லப்பட்டதற்கு பெண்ணொருவர் பயங்கரமான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நியூ சௌத் வேல்ஸின் மேற்கு கடற்கரையில் உள்ள பூங்கா ஒன்றில், திங்கட்கிழமை அதிகாலை Gordon Kessey என்ற 44 வயது நபர் இறந்து கிடந்தார். மேலும் தாக்குதலுக்கு உள்ளான மற்றொரு நபர் வைத்தியசாலையில் உயிருக்கு போராடி வருகிறார்.

அதிகாலை 2 மணியளவில் அலறல் சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது. Chainsaw ஆயுதத்தால் இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கொடூரமான தாக்குதல் பற்றிய செய்தி கடலோர நகரம் முழுவதும் வேகமாக பரவியது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொல்லப்பட்ட Kessey, போதைப்பொருள் விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர் என்பதால் கொடிய மோதலுக்கு காரணம் அதுவாக இருக்குமோ என பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கெஸ்ஸியின் காதலி அமண்டா மான்டன் சமூக ஊடகங்களில் பயங்கரமான எச்சரிக்கை பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், “நான் உன்னை இழக்கிறேன் கோர்டன். நாம் ஒன்றாக இருந்த 11 ஆண்டுகளில் நான் என் முழு மனதுடன் நேசித்தேன். கவலைப்படாதே, உன் மரணத்தை மறக்க முடியாது, நான் செய்தது போல் உன்னை நேசித்தவர்கள் கண்டிப்பாக அந்த நாய்களை சுவாசிக்காமல் பார்த்துக் கொள்வார்கள் என்று எனக்குத் தெரியும். அந்த நாய்கள் சிறைக்கு செல்லும்போது கொல்லப்படுவார்கள். சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு இளைஞர்கள் என்னவனை கொன்றுவிட்டார்கள். அவர்கள் தப்பித்துவிட்டதாக நினைக்கிறார்கள். கொல்லத் தயாராக வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...