ஆபிரிக்க நாடான எஸ்வதினியின் மன்னர் தனது 15மனைவிகள் மற்றும் வேலையாட்களுடன் தனி விமானத்தில் பயணித்த பழைய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பரவி, கடும் விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
தென்னாபிரிக்க நாடான எஸ்வதினியின் மன்னராக மூன்றாம் மஸ்வாதி கடந்த ஜூலை மாதம் தனது 15 மனைவிகள், 30 குழந்தைகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட வேலையாட்கள் புடைசூழ தனி விமானம் மூலம் அபுதாபிக்கு சென்றிருந்தார்.
மன்னரின் இந்த பிரம்மாண்ட வருகையால், அபுதாபி விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன், பாதுகாப்பு கருதி சில முனையங்கள் மூடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அப்போது எடுக்கப்பட்ட காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது அந்த காணொளி மீண்டும் வைரலாகி மன்னரின் ஆடம்பர வாழ்க்கைக்கும், அவரது நாட்டின் மக்கள் படும் இன்னல்களுக்கும் இடையேயான வேறுபாட்டைச் சுட்டிக்காட்டி கடும் கண்டனங்களைப் பெற்று வருகிறது.
இந்த காணொளியை பகிர்ந்த பலரும் மன்னரின் செயலுக்குக் கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.