விக்டோரியாவின் புதிய மெட்ரோ சுரங்கப்பாதை திறப்பு விழா டிசம்பர் மாத தொடக்கத்தில் நடைபெறும். அதன்படி, டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்து பெப்ரவரி 1 வரை ஒவ்வொரு வார இறுதியிலும் பயணிகளுக்கு இலவச பொது போக்குவரத்து சேவைகளை வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இது மாநில வரலாற்றில் மிகப்பெரிய இலவச போக்குவரத்து நிகழ்வு என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்தக் காலகட்டத்தில், விக்டோரியா முழுவதும் ரயில், பேருந்து மற்றும் டிராம் சேவைகள் இலவசமாக இருக்கும். மேலும் பயணிகள் தங்கள் myki அட்டையை செயல்படுத்தவோ அல்லது கட்டணம் செலுத்தவோ தேவையில்லை. இருப்பினும், இது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே பொருந்தும்.
விக்டோரிய மக்கள் நன்றி தெரிவிக்க இது ஒரு சிறப்பு தருணம் என்று பிரதமர் ஜெசிந்தா ஆலன் கூறினார். மேலும், ஒவ்வொரு வார இறுதியிலும் அனைவருக்கும் இலவச போக்குவரத்தை வழங்க முடிந்ததில் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் கூறினார்.
15.5 பில்லியன் டாலர் செலவில் கட்டப்பட்ட மெல்பேர்ண் மெட்ரோ சுரங்கப்பாதை, போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பயணிகளுக்கு வேலை, பல்கலைக்கழகம் மற்றும் வீட்டிற்கு விரைவான சேவைகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.