Qantas வாடிக்கையாளர் தரவு திருட்டுக்காக சைபர் குற்றவாளிகளுக்கு பணம் செலுத்தத் தயாராக இல்லை என்று ஆஸ்திரேலிய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
5.7 மில்லியன் Qantas வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவுகள் Dark Web-இல் வெளியிடப்பட்டது தொடர்பாக அரசு அதிகாரிகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
சைபர் குற்றவாளிகளுக்கு பணம் செலுத்தப்பட்டால் இதுபோன்ற தாக்குதல்கள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக அரசு நிர்வாகிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஸ்கேட்டர்டு லாப்சஸ்$ ஹண்டர்ஸ் என்ற சைபர் கிரைமினல் குழுவால் நடத்தப்பட்ட இந்தத் தரவுத் திருட்டை, Qantas, அரசாங்கம் மற்றும் காவல்துறை விசாரித்து வருகின்றன.
அதன்படி, தனிப்பட்ட தரவைப் பாதுகாக்கவும் ஆலோசனைகளைப் பெறவும் 24/7 பாதுகாப்பு ஆதரவை வழங்குவதாக Qantas வாடிக்கையாளர்களுக்குத் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், கணக்குகளைப் பாதுகாப்பதற்கான கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கையாக அனைத்து கடவுச்சொற்களையும் மாற்றவும், 2FA – Two-Factor Authentication-ஐ இயக்கவும் மற்றும் முறையாக அங்கீகரிக்கப்படாத மின்னஞ்சல்களில் உள்ள இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம் என்றும் வாடிக்கையாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.