ஆஸ்திரேலிய கல்வித் துறை, குழந்தைப் பருவத் துறைக்கான உடனடி சோதனைகளைத் (spot checks) தொடங்க நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, ஒக்டோபர் மாதம் தொடங்கி ஆரம்பகால குழந்தைப் பருவக் கல்வி மற்றும் பராமரிப்பு (ECEC) சேவைகளில் அறிவிக்கப்படாத On-site ஆய்வுகளை நடத்துவதற்கான ஒரு முன்னோடித் திட்டத்தைத் தொடங்கப்போவதாகத் துறை கூறுகிறது.
நியூ சவுத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து, விக்டோரியா மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா உள்ளிட்ட பிராந்திய மற்றும் நகர்ப்புற பகுதிகளில் 40 முதல் 45 சேவை மையங்களில் On-site ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.
ஜூலை 31 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்தச் சட்டம் துறைக்கு புதிய நுழைவு அதிகாரங்களை வழங்கியுள்ளது.
அதன்படி, குழந்தை பராமரிப்பு மானிய இணக்க சிக்கல்களைக் கண்டறிந்து, கவனிக்கப்பட்ட தரம் மற்றும் பாதுகாப்பு சிக்கல்களை உள்ளூர் ஒழுங்குமுறை அதிகாரிகளுக்குத் தெரிவிக்க இந்தத் துறைக்கு அதிகாரம் உள்ளது.
பல சேவை மையங்கள் உயர் தரத்தைப் பேணுவதற்கு உறுதிபூண்டிருந்தாலும், இந்த ஆய்வுகளின் நோக்கம் தரத்தை உயர்த்துவதும் பாதுகாப்பை வலுப்படுத்துவதும் என்று கல்வித் துறை சுட்டிக்காட்டுகிறது.