விக்டோரியா மாநிலத்தைத் தாக்கிய கடுமையான புயல்களின் விளைவாக இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்தோடு பல்லாயிரக்கணக்கானோர் மின்சாரம் இல்லாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது.
விக்டோரியாவின் சில பகுதிகளில் மணிக்கு 120 கிமீ வேகத்தில் காற்று வீசியதாகவும், மெல்பேர்ண் கடற்கரையில் ஏற்பட்ட கடுமையான புயலின் விளைவாக இரண்டு பேர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெற்கு ஆஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரையில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, சேதப்படுத்தும் காற்றுடன் கிழக்கு நோக்கி நகர்வதால் இந்த நிலைமை ஏற்படுகிறது.
இன்று காலைக்குள் காற்றின் வேகம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக BoM தெரிவித்துள்ளது.
மரங்கள் முறிந்து விழுந்ததால் மெல்பேர்ண் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
மாலை 5 மணி நிலவரப்படி 17,000க்கும் மேற்பட்டோர் மின்சாரம் இல்லாமல் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெல்பேர்ணில் 401 மரங்கள் விழுந்துள்ளதாகவும், 109 சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நடைபெறவிருந்த Geelong கோப்பை பந்தயமும் மோசமான வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.





