கோவிட் ஊரடங்கு உத்தரவுகளுக்கு மத்தியில் தங்கள் படிப்பைத் தொடங்கிய மெல்பேர்ணின் Maribyrnong கல்லூரி மாணவர்கள் இப்போது உயர் நிலை தேர்வுகளை எதிர்கொள்கின்றனர்.
பெருந்தொற்று ஊரடங்கின் போது வீட்டிலிருந்து online கற்றலுக்கு மாற வேண்டியிருந்தது தங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அனுபவமாக இருந்ததாக கல்லூரி மாணவர்கள் கூறுகிறார்கள்.
இருப்பினும், தாங்கள் பெற்ற அனுபவங்கள் சவால்களை சமாளிப்பதற்கும் தங்கள் இலக்குகளை அடைவதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக அவர்கள் கூறினர்.
Maribyrnong கல்லூரியில் படிக்கும் மாணவி ஷைலா, தான் எத்தகைய சவால்களை எதிர்கொண்டாலும், தனது கல்வியை ஒருபோதும் கைவிடவில்லை என்று கூறினார்.
மேலும், தான் ஒரு தொழில்முறை கால்பந்து வீராங்கனையாக வேண்டும் என்று விரும்புவதாகவும் அவர் கூறினார்.
கோவிட் காரணமாக சமூக பின்னடைவை சந்தித்த போதிலும், கலை, விளையாட்டு மற்றும் நண்பர்களின் உதவியால் தாங்கள் மீண்டும் வலுவாக உணர்கிறோம் என்று மற்றொரு குழு மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.
இருப்பினும், தொற்றுநோய் குழந்தைகளின் மன ஆரோக்கியத்தை கடுமையாக பாதித்துள்ளதாக கல்வி ஆராய்ச்சி காட்டுகிறது.
இந்த வகுப்பில் உள்ள மாணவர்கள் கோவிட் தொற்றுநோயை எதிர்கொள்ளும்போது வலிமையானவர்களாக மாறிவிட்டதாக மாரிபிர்னாங் கல்லூரி முதல்வர் மைக்கேல் கீனன் கூறினார்.





