நான்கு வயது முதலான சிறார்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குறிப்பிட்டு புத்த கோவிலின் தலைமை துறவி ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது.
மெல்பேர்ணில் நான்கு வார மாவட்ட நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்ட 70 வயது நாவுன்னே விஜித (Naotunne Vijitha) என்பவர் மீதே 19 சிறார் துஸ்பிரயோக வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
விஜித வசிக்கும் புத்த கோவில் குடியிருப்பு, பிரார்த்தனை அறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்குள் என நான்கு முதல் 12 வயதுக்குட்பட்ட ஆறு சிறுமிகளை துஸ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
1994 ஆம் ஆண்டு ஸ்பிரிங்வேலில் உள்ள தம்ம சரண புத்த கோவிலின் தலைமை துறவியாக வெளிநாட்டிலிருந்து மெல்பேர்ணுக்கு குடிபெயர்ந்த பிறகு விஜிதவின் துஷ்பிரயோகம் தொடங்கியது என்றே சட்டத்தரணிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.
2000 ஆம் ஆண்டில் தொடர்புடைய கோயில் கீஸ்பரோவிற்கு மாற்றப்பட்ட பின்னரும் விஜிதவின் துஸ்பிரயோகம் தொடர்ந்தது என்றும் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள், தற்போது பெரியவர்களாகிவிட்டனர், அனைவரும் தங்கள் விசாரணையின் போது நீதிமன்றத்தில் சாட்சியமளித்தனர், அதேபோல் அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களும் சாட்சியமளித்தனர்.
ஆனால் விஜித தரப்பு வாதிடுகையில், உணர்வுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, குற்றச்சாட்டுகள் அனைத்தும் 25 அல்லது 30 ஆண்டுகளுக்கு முந்தையவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே அவர்கள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளின் நம்பகத்தன்மை மற்றும் துல்லியத்தை கேள்விக்குள்ளாக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில், உறுதியான சாட்சியங்களின் அடிப்படையில், விஜித மீதான 19 குற்றச்சாட்டுகளில் 17 குற்றச்சாட்டுகளுக்கு அவர் குற்றவாளி என வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மேலும், மீதமுள்ள குற்றச்சாட்டு குறித்து ஒருமித்த தீர்ப்பிற்குப் பதிலாக பெரும்பான்மை தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக நீதிபதி பர்தீப் திவானா ஜூரிகளுக்கு அறிவுறுத்தினார்.





