வெளிநாட்டு மாணவர்களுக்கான கல்வி சேவைகள் (ESOS) சட்டத்தில் திருத்தங்கள் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் திருத்தங்கள் வெளிநாட்டு மாணவர்களுக்கான படிப்புகளை முற்றிலுமாக ரத்து செய்ய கல்வி அமைச்சருக்கு புதிய அதிகாரத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது.
கல்வி அமைச்சர் இந்த அதிகாரங்களைப் பயன்படுத்தி, பாடநெறியின் தரம் குறைதல், குடிவரவுச் சட்ட மீறல்கள் மற்றும் ஆஸ்திரேலியாவின் தேவைகளுக்குப் பொருந்தாத பாடநெறிகள் குறித்து முடிவுகளை எடுக்க முடியும்.
தற்போதைய சட்டங்களின் கீழ், படிப்புகளை இடைநிறுத்துதல் அல்லது ரத்து செய்தல் என்பது பாடநெறி மட்டத்திலோ அல்லது நிறுவன மட்டத்திலோ TEQSA (உயர் கல்விப் பிரிவு) மற்றும் ASQA (தொழில் கல்விப் பிரிவு) ஆகியவற்றால் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது.
புதிய சட்டம் நாடாளுமன்ற ஒப்புதலைப் பெற்றால், பாடநெறி வகுப்புகள் எனப்படும் பல வகைப் பாடநெறிகள் அல்லது நிறுவனங்களை இடைநிறுத்தி ஒழிக்கும் அதிகாரம் அமைச்சருக்கு இருக்கும்.
புதிய சட்டத்தின் நோக்கம், படிப்புகளின் தரநிலைகளை உறுதி செய்தல், ஆஸ்திரேலிய தேவைகளுக்கு இணங்குதல் மற்றும் பொது நலன்களைப் பாதுகாப்பதாகும்.
ஆனால், இந்த அதிகாரம், ஏற்கனவே உள்ள சட்டங்களுடன் இணைந்தால், சட்டத்தை மீறாத கல்வி நிறுவனங்களுக்குக் கூட நியாயமற்ற விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.





