Newsசீனாவில் பிரபலமாகி வரும் ‘Hotpot’ குளியல்!

சீனாவில் பிரபலமாகி வரும் ‘Hotpot’ குளியல்!

-

சீனா​வின் ஹெய்​லாங்​ஜி​யாங் மாகாணத்தின் ஹார்​பின் நகரில் உள்ள ஹோட்டலான்றில் பாரம்​பரிய சீன மருத்​துவ முறைப்​படி Hotpot குளியல் முறை அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது.

5 மீற்றர் விட்​ட​முள்ள ஒரு வட்ட வடிவ தொட்​டி​யில் வெந்​நீர் நிரப்​பப்​பட்​டுள்​ளது. அது பார்​வை​யாளர்​களைக் கவர்​கிறது. ஒரு பிரிவு சிவப்​பாக​வும், மற்​றொரு பிரிவு வெள்ளை நிறத்​தி​லும் உள்​ளது அந்த தொட்​டி​யில் சிவப்​புப் பக்​கம் உள்ள தண்​ணீரில் மிள​காய், கத்​தரிக்​காய், முட்​டைக்​கோஸ் ஆகியவை நிரப்​பப்​பட்​டுள்​ளன. வெள்ளை பக்​கம் உள்ள பிரி​வில் பால், சிவப்பு பேரீச்​சம்​பழம், பெர்ரி பழங்​கள் நிரப்​பப்​பட்​டுள்​ளன.

இது​போன்ற சூடான, சூப் போன்ற குளங்​களில் பொது​மக்​கள் மூழ்கி எழும்​போது அவர்​களுக்கு புத்​துணர்வு கிடைக்​கிறது என்று சீனா​விலிருந்து வெளி​யாகும் South China Morning Post பத்​திரிகை செய்தி வெளி​யிட்​டுள்​ளது. தற்​போது இது​போன்ற Hotpot குளியலை மேற்​கொள்ள சுற்​றுலாப் பயணி​கள் ஆர்​வம் காட்டி வரு​கின்​றனர்.

இதுகுறித்து இந்த ஹோட்டலின் Hotpot குளியல் பிரி​வில் உள்ள ஊழியர் ஒரு​வர் கூறும்​போது

“இந்த Hotpot குளியல் தொட்​டி​யில் சிவப்பு நிறத்​தில் உள்ள நீர், உண்​மை​யில் ரோஜா இதழ்​களில் இருந்து உரு​வாகிறது. தின​மும் புதிய ரோஜா இதழ்​களை அதில் கொட்​டு​வோம். மேலும், இங்கு பயன்​படுத்​தப்​படும் மிள​காய்​கள் லேசான கார​முள்ள வகை​யைச் சேர்ந்​தவை. இதில் குளிப்​பவர்​களின் ரத்த ஓட்​டத்தை இந்த மிள​காய்​கள் மேம்​படுத்​துகின்​றன. வெள்ளை நிறத் தொட்​டி​யில் உள்ள பால், சரு​மத்தை ஈரப்​ப​த​மாக வைத்​திருக்க உதவு​கிறது” என்​றார்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...