சிட்னியில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆயுத கண்காட்சிக்கு எதிராக மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் 10 பேர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெறும் “Indo Pacific 2025” ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு கண்காட்சிக்கு எதிராக போராட்டம் தொடங்கியது.
இரண்டு பொது எதிர்ப்பு பேரணிகளில் சுமார் 200 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் பலர் பாலஸ்தீனிய கொடிகள் மற்றும் எதிர்ப்பு அடையாளங்களை ஏந்தியபடி போராட்டங்களில் இணைந்தனர்.
தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் போராட்டக்காரர்கள் நுழைய முயன்றபோது, போலீசாருடன் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.
போராட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் capsicum spray-ஐ பயன்படுத்தினர். கைது செய்யப்பட்டவர்களில் இருவர் குற்றச்சாட்டு இல்லாமல் விடுவிக்கப்பட்டனர்.
போராட்டக்காரர்கள் தற்போது Town Hall நோக்கி நகர்ந்து வருகின்றனர். மேலும் George தெரு மற்றும் Liverpool தெருவில் தற்காலிக சாலை மூடல்களை போலீசார் அறிவித்துள்ளனர்.
மேலும், மோப்ப நாய் பிரிவு, குதிரைப்படை போலீசார், கலகக் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் சிறப்பு நடவடிக்கைப் பிரிவு ஆகியவை அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





