Microsoft தனது சந்தா திட்டத்தில் (subscription plan) ஏற்பட்ட விலை நிர்ணய பிரச்சினைக்காக ஆஸ்திரேலிய வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.
இதற்கிடையில், ஆஸ்திரேலிய போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம் (Australian Competition and Consumer Commission – ACCC) மைக்ரோசாப்ட் மீது கூட்டாட்சி நீதிமன்ற வழக்கைத் தொடங்கியுள்ளது என்று கூறப்படுகிறது.
Microsoft தனது Office 365 subscription plan-ஐ புதுப்பிக்கும்போது குறைந்த விலை சந்தா திட்டத்தை மறைத்ததாக ACCC குற்றம் சாட்டுகிறது.
இது வாடிக்கையாளர்களை Copilot திட்டத்திற்கு மாற கட்டாயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இது நுகர்வோர் தகவலறிந்த முடிவுகளை எடுப்பதை கடினமாக்குகிறது என்று ACCC தலைவர் ஜினா காஸ்-காட்லீப் கூறுகிறார்.
இருப்பினும், இதைத் தெளிவாகத் தெரிவிக்காததற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பணத்தைத் திருப்பித் தருவதாகவும் Microsoft கூறியுள்ளது .
இதற்கிடையில், நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வெளியிட உள்ளது. மேலும் அந்த நிறுவனம் 50 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Microsoft 365 வாடிக்கையாளர்கள் தங்கள் மின்னஞ்சல்களைச் சரிபார்த்து சரியான திட்டத்தை இப்போதே தேர்வு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.





