British Airways விமானத்தில் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இந்தியருக்கு 21 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 14 ஆம் திகதி மும்பையில் இருந்து லண்டன் ஹீத்ரோ செல்லும் விமானத்தில் தனது அருகில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை 34 வயதான ஜாவேத் இனாம்தார் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
விமானம் ஹீத்ரோவில் தரையிறங்கிய பிறகு அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
சிறுமி அலறியதை அடுத்து விமானக் குழுவினர் தலையிட்டதாக நீதிமன்றம் குறிப்பிட்டது. இதற்கிடையில், இனாம்தார் அந்தப் பெண்ணை தனது மனைவி என்று தவறாகக் கருதியதாகவும், அந்த சம்பவம் தனக்கு தெளிவாக நினைவில் இல்லை என்றும் கூறியுள்ளார்.
ஆனால் 13 வயதுக்குட்பட்ட குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜூரி அவரை குற்றவாளி என்று கண்டறிந்தது.
இது சிறுமிக்கு கடுமையான மனரீதியான பாதிப்பை ஏற்படுத்திய சம்பவம் என்று நீதிமன்றம் கூறியது. குற்றவாளி வேண்டுமென்றே தவறான அறிக்கைகளை வெளியிட்டு மிகவும் மோசமான முறையில் செயல்பட்டதாக
நீதிபதி சைமன் டேவிஸ் கூறினார்.
தண்டனை விதிக்கும் போது, இந்த தீர்ப்பு இந்த நாட்டில் குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு தெளிவான எடுத்துக்காட்டு என்று நீதிபதி கூறினார்.





