ஆஸ்திரேலியாவில் பெண்ணொருவர் வீட்டில் சந்தேகத்திற்கிடமான சூழலில் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்கு நியூ சவுத் வேல்ஸின் South Crofton-இல் உள்ள ஒரு வீட்டிற்கு காவல்துறை அதிகாரிகள் சென்றுள்ளனர்.
தகவல்களின் அடிப்படையில் அங்கு பெண்ணொருவர் பொலிஸாரால் மீட்கப்பட்டார். ஆனால் அவர் பலத்த காயமடைந்திருந்தார்.
உடனே NSW ஆம்புலன்ஸ் துணை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு, குறித்த பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க முயற்சிக்கப்பட்டது.
துரதிர்ஷ்டவசமாக அப்பெண் காயங்களால் இறந்தார். அவரது மரணம் குறித்து துப்பறியும் அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இதனையடுத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், “பெண் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, துப்பறியும் அதிகாரிகள் அவரது மரணத்தைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் குறித்து விசாரணையைத் தொடங்கினர்.
குற்றம் நடந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சிறப்பு பொலிஸாரால் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. 30 வயதுடைய பெண் என்று நம்பப்படும் மரணத்திற்கான சரியான காரணத்தை பிரேத பரிசோதனை மூலம் தீர்மானிக்க முடியும்” என கூறப்பட்டுள்ளது.





