ஆஸ்திரேலியாவில் asbestos கலப்படம் காரணமாக 16 பள்ளிகள் திடீரென மூடப்பட்டுள்ளன.
கான்பெராவில் பதினைந்து பள்ளிகளும் பிரிஸ்பேர்ணில் ஒரு பள்ளியும் நேற்று உடனடியாக மூடப்பட்டுள்ளன.
பிரிஸ்பேர்ணில் உள்ள மான்செல் கல்லூரியில் மாணவர்களின் செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படும் வண்ண மணலில் Chrysotile asbestos துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
முன்னதாக, ACT-யில் உள்ள 15 பள்ளிகள் asbestos மாசுபாடு காரணமாக மூடப்பட்டன. மேலும் பல பள்ளிகள் மாசுபடும் அபாயம் காரணமாக பகுதியளவு மூடப்பட்டுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் நேற்று தொடங்கியதாக ACT கல்வி அமைச்சர் யெவெட் பெர்ரி தெரிவித்துள்ளார்.
உரிமம் பெற்ற asbestos ஒப்பந்ததாரர்கள் வார இறுதி முழுவதும் சீரமைப்பு பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்வார்கள்.
வரும் திங்கட்கிழமை முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது.
இருப்பினும், நேற்று காலை எட்டு சோதனை முடிவுகள் பெறப்பட்டதாகவும், அவை அனைத்தும் காற்றில் பரவும் இழைகளுக்கு எதிர்மறையாக இருந்தன என்றும் ACT WorkSafe ஆணையர் ஜாக்குலின் அஜியஸ் கூறுகிறார்.
இதற்கிடையில், ஆஸ்திரேலிய போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம் சமீபத்தில் Kadink மணல், Educational Colors Rainbow Sand மற்றும் Creatistics Colored Sand ஆகியவற்றை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. ஏனெனில் மணலில் அஸ்பெஸ்டாஸ் இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





