நாட்டின் முக்கிய உட்கட்டமைப்பு வசதிகளை சீர்குலைப்பதற்கான முயற்சிகள் இணைய ஊடுருவல்காரர்கள் ஊடாக இடம்பெற்று வருவதாக ஆஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் தலைவர் மைக் பர்கெஸ் தெரிவித்துள்ளார்.
அரசாங்க மற்றும் இராணுவ கட்டமைப்புக்களை இலக்கு வைத்து இந்த நாச வேலைகளை முன்னெடுக்கப்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மெல்பேர்ணில் வணிகத் தலைவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில், ஆஸ்திரேலியாவில் உள்ள முக்கிய உள்கட்டமைப்புக்களை ஸ்கேன் செய்து ஊடுருவ பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அத்தோடு எமது நட்பு நாடுகளின் நீர், போக்குவரத்து, தொலைத்தொடர்பு மற்றும் எரிசக்தி வலையமைப்புகளும் குறிவைக்கப்பட்டுள்ளளன என குறிப்பிட்டுள்ளார்.





