பங்களாதேஷ் உட்பட பல நாடுகளில் கிறிஸ்தவர்கள் அதிக துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக பாப்பரசர் லியோ கவலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பாப்பரசர் 16ஆம் லியோ, சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
உலகின் பல்வேறு பகுதிகளில், கிறிஸ்தவர்கள், பாகுபாட்டையும், துன்புறுத்தலையும் அனுபவிக்கின்றனர். குறிப்பாக பங்களாதேஷ் நைஜீரியா, மொசாம்பிக், சூடான் உள்ளிட்ட நாடுகளில் சிறுபான்மை சமூகங்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதல்களை பற்றி நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம்.
அனைத்து வன்முறைகளும் முடிவுக்கு வரவும், பொது நன்மைக்காக ஒன்றிணைந்து செயல்படவும் நாம் பிரார்த்தனை செய்வோம்” என்று அவர் கூறியுள்ளார்.





