Sydneyசிட்னியில் சாலையை கடக்கும்போது கார் மோதி பலியான கர்ப்பிணிப் பெண்

சிட்னியில் சாலையை கடக்கும்போது கார் மோதி பலியான கர்ப்பிணிப் பெண்

-

ஆஸ்திரேலியாவில், சாலையைக் கடக்கும்போது கார் மோதி பலியானார் இந்தியப் பெண்ணொருவர். கூடுதல் சோகம் என்னவென்றால், அவர் எட்டு மாத கர்ப்பிணி!

கடந்த வெள்ளிக்கிழமை, அதாவது, நவம்பர் மாதம் 14ஆம் திகதி இரவு, ஆஸ்திரேலியாவில் வாழும் சமன்விதா தரேஷ்வர் (33), சிட்னியிலுள்ள Hornsby என்னுமிடத்தில் சாலையைக் கடக்க முயன்றுள்ளார்.  

எட்டு மாத கர்ப்பிணியான சமன்விதா சாலையைக் கடக்க முயல்வதைக் கண்ட கியா கார்னிவல் கார் ஒன்றின் சாரதி, அவர் சாலையைக் கடப்பதற்கு வசதியாக தனது காரின் வேகத்தைக் குறைத்துள்ளார்.

துரதிர்ஷ்டவசமாக, அவரது காருக்குப் பின்னால் ஒரு BMW கார் வேகமாக வந்துகொண்டிருந்திருக்கிறது. 

வேகமாக வந்துகொண்டிருந்த அந்த BMW கார் இந்த கியா கார் மீது மோத, கியா கார் சமன்விதா மீது மோதியுள்ளது. 

படுகாயமடைந்த சமன்விதாவை அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும், அவரையோ, அவரது கர்ப்பத்திலிருந்த குழந்தையையோ மருத்துவர்களால் காப்பாற்றமுடியாமல் போயுள்ளது.

அந்த BMW காரை, 19 வயதாகும் Aaron Papazoglu என்னும் இளைஞர் ஓட்டிவந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமன்விதா, இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது. அவரும் அவரது கணவரான வினீத்தும் அவுஸ்திரேலியாவில் வீடு ஒன்றைக் கட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில், இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Latest news

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு – ஆஸ்திரேலிய விமான போக்குவரத்துக்கு எச்சரிக்கை

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, வானில் சுமார் 2 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் பரவியதை அடுத்து, ஆஸ்திரேலியாவில் விமானப் போக்குவரத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் ஜாவா...

Ai சொல்வதையெல்லாம் உண்மையென்று நம்பக்கூடாது – சுந்தா் பிச்சை

செயற்கை நுண்ணறிவு (AI) செயலிகள் சொல்வதையெல்லாம் மக்கள் “கண்மூடித்தனமாக நம்பக் கூடாது” என்று கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை செயல் அதிகாரி சுந்தா் பிச்சை...

ஜப்பானில் பாரிய தீ விபத்து – 170 வீடுகள் தீக்கிரை

ஜப்பானில் உள்ள ஓய்டா நகரில் சுமார் 170 வீடுகள் தீ பற்றி எரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துறைமுகத்தில் பரவிய தீ அருகில் இருந்து வீடுகளுக்கும் பரவியதாக முதற்கட்ட...

ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் வீணாக்கும் ஆஸ்திரேலிய பொது மருத்துவமனைகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள பொது மருத்துவமனைகள் ஆண்டுக்கு $1.2 பில்லியன் வீணாக்குவதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. Grattan Institute அறிக்கை, பொது மருத்துவமனைகள் தேவையற்ற நீண்ட மருத்துவமனை தங்குதல்...

சமூக ஊடகத் தடை நெருங்கி வருவதால் Meta விடுத்துள்ள எச்சரிக்கை

சமூக ஊடகத் தடை நெருங்கி வருவதால் Meta, லட்சக்கணக்கான ஆஸ்திரேலிய இளைஞர்களுக்கு Instagram, Facebook மற்றும் Threads-இல் இருந்து தங்கள் தரவை "download or delete"...

மேற்கு ஆஸ்திரேலியாவில் குழந்தை பராமரிப்பு மையத்திற்கு தீ வைத்த நபர்

மேற்கு ஆஸ்திரேலிய குழந்தை பராமரிப்பு மையம் தீப்பிடித்து எரிந்ததில், $500,000 மதிப்புள்ள சேதம் ஏற்பட்டதை அடுத்து, ஒருவர் மீது தீ வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நேற்று மாலை...