Newsநைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

-

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர் உள்பட 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து கடத்தல்காரர்களிடம் இருந்து 2 மாணவிகள் தப்பி ஓடி பொலிஸில் தஞ்சம் அடைந்தனர். அவர்கள் உதவியுடன் மற்ற மாணவிகளை மீட்கும் முயற்சியில் பொலிஸார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

இந்த மீட்பு பணிக்கு உதவுவதற்காக நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் அல்–ஹாஜ்ஜி பெல்லோவை கெபி மாகாணத்துக்குச் செல்ல ஜனாதிபதி போலா டினுபு உத்தரவிட்டுள்ளார். கடந்த 2021-ல் பள்ளியில் இருந்து கடத்தப்பட்ட 279 மாணவர்களை மீட்பதில் இவர் முக்கிய பங்காற்றினார்.

இந்நிலையில், நைஜர் மாகாணம் பாபிரி நகரில் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவ பாடசாலை செயல்படுகிறது. இதன் அருகே மாணவர்கள் தங்கும் விடுதியும் அமைந்துள்ளது.

அந்த விடுதிக்குள் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் சிலர் நுழைந்தனர். பின்னர் துப்பாக்கி முனையில் 100 மாணவர்களை அந்த கும்பல் கடத்திச் சென்றது.

ஒரே வாரத்தில் 2-வது முறையாக பாடசாலை மாணவர்கள் கடத்தப்பட்ட சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே, அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக தனது அனைத்து வெளிநாட்டுப் பயணங்களையும் ஒத்தி வைப்பதாக ஜனாதிபதி போலா டினுபு அறிவித்துள்ளார்.

Latest news

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...

பாலிக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்களுக்கு கடுமையான விதிகள்

பல ஆஸ்திரேலியர்கள் விடுமுறை கிடைத்தவுடன் பாலிக்குச் செல்ல ஆர்வமாக உள்ளனர். கடற்கரைக்குச் செல்ல MOPED அல்லது மோட்டார் சைக்கிள்களை வாடகைக்கு எடுப்பது அவர்களுக்குப் பழக்கமாகிவிட்டது. ஆனால் பாலி அதிகாரிகள்...

ஆஸ்திரேலிய மாணவர்களுக்கு மாணவர் கடன் தொடர்பில் மிகப்பெரிய நிவாரணம்

ஆஸ்திரேலியாவின் மாணவர் கடன் நிவாரணத் திட்டம் இன்று தொடங்குகிறது. முதல் சுற்றில் 100,000 ஆஸ்திரேலியர்கள் கடன் நிவாரணம் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு, அவர்கள் தங்கள் கடன்...