Newsவிமானத்தின் வாலில் பாராசூட் உடன் சிக்கிய Skydiver

விமானத்தின் வாலில் பாராசூட் உடன் சிக்கிய Skydiver

-

வான் சாகத்தில் ஈடுபடும் போது ஸ்கைடைவரின் பாராசூட் விமானத்தின் வாலில் சிக்கிக் கொண்ட மோசமான சம்பவம் நடந்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் Cairns தெற்கே சுமார் 15,000 அடி உயரத்தில் Farmation Jump-இற்காக 16 பேர் கொண்ட குழு தயாரான போது யாரும் எதிர்பாராத சம்பவம் அரங்கேறத் தொடங்கியுள்ளது.

முதல் ஸ்கைடைவர் குதிப்பதற்காக வெளியேறும் இடத்தை நெருங்கிய போது,  ஸ்கைடைவரின் தற்காப்பு பாராசூட் விமானத்தின் கைப்பிடி சிக்கிய எதிர்பாராத விதமாக திறக்கப்பட்டுள்ளது.

இதனால் அடுத்த நொடியே நிலைகுலைந்த ஸ்கைடைவர் விமானத்தில் இருந்து இழுத்து செல்லப்பட்டார். பாராசூட் விமானத்தின் வால் பகுதியில் சிக்கிக் கொண்டு நிலைமையை மேலும் மோசமாக்கியது.

இந்த குழப்பமான நிலையில் விமானத்தில் இருந்து குதிக்க தயாராக இருந்த கேமரா ஆப்பரேட்டரும் நிலைதடுமாறி விமானத்தில் இருந்து கட்டற்ற வீழ்ச்சிக்கு ஆளானார்.

இந்த பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் விமானத்தின் வாலில் பாராசூட் உடன் சிக்கிக் கொண்ட ஸ்கைடைவர் தனது கொக்கிக் கத்தியை பயன்படுத்தி விமானத்தின் வாலில் சிக்கிக் கொண்ட தற்காப்பு பாராசூட்டின் கயிற்றை அறுத்து தன்னை விடுவித்துக் கொண்டார்.

பின்னர் அவரது பிரதான பாராசூட்டை பயன்படுத்தி பத்திரமாக தரையிறங்கியுள்ளார். அதே சமயம் விமானத்தின் வால் பகுதி சேதமடைந்ததால், விமான அவசர உதவிக்காக “mayday” அழைப்பை விடுத்தார்.

இருப்பினும், அந்த விமானியே விமானத்தை வெற்றிகரமாக தரையில் இறக்கினார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ஆஸ்திரேலிய போக்குவரத்துப் பாதுகாப்பு பணியகம் அதிகாரிகள் இந்த காணொளிக் காட்சியை தற்போது வெளியிட்டுள்ளனர்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...