NewsBondi தாக்குதலுக்குப் பின் யூத வழிபாட்டுத் தலங்களில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

Bondi தாக்குதலுக்குப் பின் யூத வழிபாட்டுத் தலங்களில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

-

சிட்னி நகரில் உள்ள Bondi கடற்கரையில் கடந்த 14ம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டின் எதிரொலியாக, பிரித்தானியா முழுவதும் உள்ள யூத வழிபாட்டுத் தலங்களுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

Bondi கடற்கரையில், யூதா்களின் ‘ஹனுக்கா’ பண்டிகை தொடக்க கொண்டாட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையொட்டி, லண்டன் பெருநகர பொலிஸார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘பெருநகரின் யூத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் யூத சமுதாய மையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாங்கள் பாதுகாப்பை அதிகரித்துள்ளோம். மேலும், அந்தப் பகுதிகளில் கூடுதலாக ரோந்து பணிகளையும் மேற்கொள்கிறோம்.

எதிர்வரும் நாட்களில் நடைபெறும் ஹனுக்கா பண்டிகை கொண்டாட்டங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த யூத சமூகத்தினருடன் இணைந்து செயற்பட்டு வருகிறோம்.

அதேநேரம், பொது நிகழ்வுகளிலும், மற்ற இடங்களிலும் மக்கள் தொடா்ந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில், ‘Bondi கடற்கரையில் நடந்த தாக்குதல், யூதா்களுக்கு எதிரான வெறுப்புணா்வில் செய்யப்பட்ட தீவிரவாத செயல் என்ற செய்தி மிகவும் அருவருப்பானது.

பாதிக்கப்பட்டவா்களுக்கும், அவா்களின் குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆஸ்திரேலியாவுக்கும் யூத சமூகத்தினருக்கும் பிரிட்டன் எப்போதும் துணையாக நிற்கும். ஹனுக்கா நிகழ்வுகளுக்குப் பாதுகாப்பு அளிப்பது பற்றி, சமூகப் பாதுகாப்பு அறக்கட்டளையுடன் நாங்கள் தீவிரமாக பணியாற்றி வருகிறோம்’ என்று குறிப்பிட்டாா்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...