தொலைக்காட்சி வரலாற்றில் ஒரு பெரிய திருப்புமுனையாக, Academy விருதுகள் 2029 முதல் ABC-யிலிருந்து வெளியேறி நேரடியாக YouTube-க்கு நகர உள்ளன.
2028 வரை வழக்கம் போல் 100வது OSCARS விருதுகள் உட்பட அனைத்து விருது விழாக்களையும் ABC ஒளிபரப்பும், புதிய ஒப்பந்தம் 2029 இல் தொடங்க உள்ளது.
அதன் பிறகு, 2029 முதல் 2033 வரையிலான OSCARS விருதுகளுக்கான உலகளாவிய ஒளிபரப்பு உரிமையை YouTube சொந்தமாக்கும், மேலும் red carpet ,Governors விருதுகள் மற்றும் OSCARS பரிந்துரை அறிவிப்புகள் அனைத்தும் YouTube இல் உலகம் முழுவதும் இலவசமாகப் பார்க்கக் கிடைக்கும்.
இந்தக் கூட்டாண்மை ஆஸ்கார் அனுபவத்தை 2 பில்லியனுக்கும் அதிகமான YouTube பார்வையாளர்களுக்குக் கொண்டு செல்லும் என்று அகாடமி கூறுகிறது.
பார்வையாளர்கள் பல மொழிகளில் கேட்கவும், YouTube இல் மூடிய வசன சேவைகளை அணுகவும் முடியும்.
அரை நூற்றாண்டுக்கும் மேலாக ABCயில் ஒளிபரப்பப்பட்டு வரும் ஆஸ்கார் விருதுகள், இந்த முடிவின் மூலம் தொலைக்காட்சி ஒளிபரப்புகளை முற்றிலுமாக கைவிட்டு ஸ்ட்ரீமிங் சகாப்தத்தில் நுழைந்த முதல் பெரிய விருது நிகழ்ச்சியாக வரலாற்றை உருவாக்க உள்ளன.





