Bondi கடற்கரையில் நடந்த கொடிய பயங்கரவாத தாக்குதலின் நினைவாக, பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தேசிய துக்க தினத்தை அறிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்கும், துக்கப்படுபவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவைத் தெரிவிப்பதற்கும் இந்த நாள் பெயரிடப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
அதன்படி, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 21 ஆம் திகதி, இதற்காக நியமிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து அரசு கட்டிடங்களிலும் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.
தாக்குதல் நடந்த அதே நேரத்தில், மாலை 6.47 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்றி ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறும் அரசாங்கம் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த நாள் தேசிய ஒற்றுமைக்கான நாள் என்றும், யூத சமூகத்துடன் ஒற்றுமையாக நின்று அதன் துக்கத்தைப் பகிர்ந்து கொள்கிறோம் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.





