மேற்கு ஆஸ்திரேலிய சுகாதார அதிகாரிகள் தட்டம்மை அபாயம் குறித்து சிறப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
பெர்த்தில் கிறிஸ்துமஸ் கரோல் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒருவருக்கு தட்டம்மை நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
துபாயிலிருந்து வந்த இந்த நபர், டிசம்பர் 10 ஆம் திகதி Shenton பூங்காவில் நடைபெற்ற ‘Carols in the Park’ இசை நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
பின்னர் அவர் Claremont மற்றும் Whitfords-இல் உள்ள முக்கிய ஷாப்பிங் மால்களுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்த ஆண்டு மேற்கு ஆஸ்திரேலியாவில் பதிவான 58வது தட்டம்மை வழக்கு இதுவாகும்.
காய்ச்சல், இருமல், மூக்கு ஒழுகுதல், கண்கள் சிவத்தல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்துகிறார்கள்.
மருத்துவ மையங்களுக்குச் செல்வதற்கு முன்பு முன்கூட்டியே அழைக்குமாறும் அதிகாரிகள் மக்களைக் கேட்டுக்கொள்கிறார்கள்.





