Cinemaவெளியாகப்போகும் 3 இடியட்ஸ் படத்தின் அடுத்த பாகம்

வெளியாகப்போகும் 3 இடியட்ஸ் படத்தின் அடுத்த பாகம்

-

பாலிவுட் நட்சத்திரங்கள் அமீர் கான், கரீனா கபூர், மாதவன் மற்றும் ஷர்மன் ஜோஷி ஆகியோர் நடித்த 3 இடியட்ஸ் திரைப்படம் 2009 ஆம் ஆண்டு வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வசூலைப் பெற்றது.

ராஜ்குமார் ஹிரானி இயக்கிய 3 இடியட்ஸ் திரைப்படம் இந்திய மதிப்பில் ரூ.200 கோடி கிளப்பில் நுழைந்த முதல் இந்திய திரைப்படமாகும்.

இந்நிலையில், 16 வருடங்களுக்கு பின் 3 இடியட்ஸ் படத்தின் தயாரிப்பாளர்கள் அதன் அடுத்த பாகத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகின்றது.

இதற்கு 4 இடியட்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும், நான்காவது இடியட்டாக நடிக்க ஒரு பிரபலமான நடிகரை தயாரிப்பாளர்கள் தேடி வருவதாகவும் கூறப்படுகின்றது.

4 இடியட்ஸ் படத்தை ராஜ்குமார் ஹிரானியே இயக்க உள்ளதாகவும், விது வினோத் சோப்ரா தயாரிப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கின்றது. விரைவில் இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Latest news

இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி, தோஷாகானா வழக்கில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டு தலா 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை...

ஆஸ்திரேலியாவில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய துப்பாக்கி கொள்முதல்

ஆஸ்திரேலியாவில் நடந்த மிக மோசமான பயங்கரவாத தாக்குதல்களில் ஒன்றான Bondi தாக்குதலைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சட்டங்களை கடுமையாக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நியூ சவுத் வேல்ஸ் (NSW)...

இளைஞர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ள விக்டோரியன் பிரதமர் 

கடந்த சில நாட்களாக விக்டோரியாவின் Mordialloc கடலோரப் பகுதியில் இளைஞர்கள் குழுவின் கலவர நடத்தை பிரதமர் ஜெசிந்தா ஆலனின் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இருநூறுக்கும் மேற்பட்ட இளைஞர்கள்...

Bondi கடற்கரையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி அனுஷ்டிப்பு

ஞாயிற்றுக்கிழமை நடந்த துயரமான பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நூற்றுக்கணக்கான உயிர்காப்பாளர்கள் போண்டி கடற்கரையில் மூன்று நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். Bondi and...

கிறிஸ்துமஸுக்கு முன்பு எரிபொருள் விலை எப்படி உயரும்?

கிறிஸ்துமஸுக்கு சில நாட்களுக்கு முன்பு, குயின்ஸ்லாந்து முழுவதும் பெட்ரோல் விலை திடீரென அதிகரித்துள்ளது. இந்த பண்டிகை காலத்தில் இந்த அதிகரிப்பு "மிகவும் நியாயமற்றது மற்றும் எதிர்பாராதது" என்று...

ஆஸ்திரேலியாவில் குழந்தைகளை கொல்லும் கொடிய பாக்டீரியாக்கள் கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலியாவில் பள்ளிக் குழந்தைகளிடையே 'Strep A' பாக்டீரியா பரவுவதற்கான கடுமையான ஆபத்து இருப்பதாக தெரியவந்துள்ளது. கிம்பர்லி பகுதியில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பாக்டீரியா இதய...